back to top
34 C
London
Friday, June 26, 2026
No menu items!
Homeஅரசியல்முதல்வர் விஜய் கலந்து கொண்ட மாரத்தான் நிகழ்ச்சி: காவல் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்  - Kumudam

முதல்வர் விஜய் கலந்து கொண்ட மாரத்தான் நிகழ்ச்சி: காவல் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக இன்று காலை மெரீனா காமராஜர் சாலையில் “ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்’ என்ற விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு நடந்தது. 

இந்த போட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டு, மாரத்தான் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக வந்திருந்த பலர் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாமல், காவல்துறை அதிகாரிகளிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்திய வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

குறிப்பாக, அரசு சார்பில் நடத்தப்படும் ஒரு போட்டியில் ஒருங்கிணைப்பு சரி இல்லை எனவும், தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் தங்களுக்கான டி-ஷர்ட்ஸ் தரவில்லை எனவும் மேலும் ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் தங்களை காவல்துறையினர் தங்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டதாகவும் கூறி காவல்துறை உயரதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here