back to top
22.4 C
London
Friday, June 26, 2026
No menu items!
Homeதமிழ்நாடுஇனி சுரங்கப்பாதைகளில் பஸ் சிக்கி நிற்காது - சென்னை மாநகராட்சி புதிய திட்டம் - Kumudam

இனி சுரங்கப்பாதைகளில் பஸ் சிக்கி நிற்காது – சென்னை மாநகராட்சி புதிய திட்டம் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


சென்னையில் மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்தை தடை செய்ய தானியங்கி தடுப்புகளை அமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. 

AI தொழில்நுட்பத்துடன் தானியங்கி தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னையில் மழை காலங்களில் அதிகப்படியான மழை பொழிவு இருக்கும் நேரங்களில் தாழ்வான பகுதிகள், சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. மழை பெய்யும்போது சாலைகளில் தேங்கும் மழைநீர் வடிகால் வழியாக அகற்றப்படுகிறது.

மழைக்காலங்களில் சாலைகளை காட்டிலும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்குவதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் சில நேரங்களில் ஆழம் தெரியாமல் நீரில் சிக்கிக்கொள்கின்றன. குறிப்பாக, மாநகர பேருந்துகள் அவ்வப்போது இதுபோல் சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கி, பழுதாகி நிற்பது வழக்கம். 
மேலும், மழைநீர் வடியும் வரை, அந்த சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

இதனிடையே சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, மழைக்காலங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.அதைத்தொடர்ந்து, சென்னையில் 12 ஒற்றை வழிப்பாதை மற்றும் 5 இரட்டை பாதை சுரங்கப்பாதைகளில் தானியங்கி சாலை தடுப்புகளை நிறுவ சென்னை மாநகராட்சி திட்டமிட்டு, அதற்கான டெண்டர் வெளியிட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், இந்த திட்டதை மழைநீர் வடிகால் துறை மேற்கொள்ள உள்ளது.

சென்னையில் 22 உள்ள சுரங்கப்பாதைகளில் , 17 சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கும் இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் அளவு உயரும்போது, தானாக கண்டறிய சுரங்கப்பாதை அணுகல் கட்டுப்பாட்டு அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மழைநீர் ஒரு குறிப்பிட்ட வரம்பை அடையும் போது, அந்த சுரங்கப்பாதை வழியே வாகன போக்குவரத்தை தடுக்க தானியங்கி தடுப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவுடன், நீர் நிலைகளை நிகழ்நேர கண்காணிப்புக்கு இன்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் கூறப்படுகிறது. வெள்ள நீர் வடிந்தவுடன் தடைகள் தானாக அகற்றப்படும் எனவும், சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் செயலி, அவசரநிலைகளின் போது தடைகளை நேரடியாக அதிகாரிகள் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.இந்த தடைகள் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டு, சுரங்கப்பாதைகளில் நிகழ்நேர வெள்ள நிலைமையை கண்காணிக்கும். 

டிஜிட்டல் செய்தி பலகைகள், நீரில் அளவு குறித்த நிகழ்நேர தகவல் மற்றும் தமிழ், ஆங்கில குரல் அறிவிப்பு அமைப்பு போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த திட்டத்தில் அடங்கும் எனவும் மோசமான வானிலையின்போது, பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சுரங்கப்பாதையின் நிலைமை குறித்து தெரியப்படுத்தவும், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதைகளில் வாகனங்கள் சிக்கித் தவிக்கும் அபாயம் குறையும். இந்த திட்டத்திற்கு ரூ.63.60 லட்சம் முதல் ரூ.92.99 லட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here