back to top
22.5 C
London
Friday, June 26, 2026
No menu items!
Homeஅரசியல்Reporter நேர்காணல்: “விஜய் ஒரு ஒபாமா..“- மனம் திறக்கும் வைகோ! - Kumudam

Reporter நேர்காணல்: “விஜய் ஒரு ஒபாமா..“- மனம் திறக்கும் வைகோ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளீர்கள். அந்த சந்திப்பு எப்படி இருந்தது?

47 நிமிடங்கள் அவரோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர், தான் பேசுவதைக் காட்டிலும், எதிரில் இருப்போர் பேசுவதைக் கேட்கிறார். உள்வாங்குகிறார். இன்னும் ஆறு மாதங்களில் நிர்வாக நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு தன்னை சிறப்பாக வடிவமைத்துக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.”

விஜய்யை, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் நீங்கள் ஒப்பீடு செய்துள்ளீர்களே?

“அரசு பொறுப்புகளில் அமரும் முக்கிய பிரமுகர்கள் பதவி ஏற்கும்போது. பதவிப் பிரமாண வாசகங்களைப் பார்த்துத்தான் படிப்பார்கள். ஆனால், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றபோது, பதவிப் பிரமாணத்தைப் பார்த்து வாசிக்காமல், மனனம் செய்ததைக் கூறி பதவியேற்றார். ஆனால், அவர் அதில் இரண்டு தவறுகளை செய்ததால், மீண்டும் ஒருமுறை பதவியேற்க வேண்டி வந்தது. ஆனால் விஜய், பதவி பிரமாண வாசகங்களைப் பார்த்து படிக்கவில்லை. தவறில்லாமல் தடுமாறாமல் அப்படியே கூறி, முதல்வராக பதவியேற்றார். வென்றுவிட்டீர்கள்’ என்று ‘இந்த விஷயத்தில் ஒபாமா தோற்றுவிட்டார். நீங்கள் முதல்வரிடம் தெரிவித்தேன்.”

முதல்வரிடம் கோரிக்கை எதுவும் வைத்தீர்களா?

“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 25 ஆண்டுகளாக வேறு பெயரில் மீண்டும் ஆலையைக் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன. அதை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தினேன். தூத்துக்குடியில் சிந்தப்பட்ட ரத்தம் இன்னும் நீதிக்காகக் காத்திருக்கிறது என்பதை சொன்னபோது, கவனமாக கேட்டுக்கொண்டார்.”

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை எப்படி இருந்தது?

“ஆளுநர் உரையை அரசுதான் தயாரிக்கிறது. அது அரசின் கொள்கை உரை. குறை காணமுடியாத அளவுக்கு ஒரு சிறந்த ஆளுநர் உரையாக இந்த உரை அமைந்தது. கடந்தகால நிகழ்வுகளைப்போல் அல்லாமல், ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளதே. அது முதலமைச்சர் துணிச்சலாக எடுத்த முடிவு சுயமரியாதையை பாதுகாக்கும் முடிவு. தமிழ்தான் இங்கு உச்சத்தில் இருக்கவேண்டும் என்பதை அவர் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார். ஒருவேளை சட்டசபையில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டிருந்தால், எங்கள் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் இறங்கியிருப்பார்கள்.”

‘இருமொழிக் கொள்கை தொடரும்’ என்று ஆளுநர் உரையில் கூறியிருப்பது குறித்து?

‘சபாஷ்’ ஆளுநர் இதைக் குறிப்பிட்டதால், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிலைப்பாடு தொடர வேண்டும்”

முந்தைய ஆளுநரின் செயல்பாடுகளை கடுமையாகக் கண்டித்துள்ளீர்கள். தற்போதைய ஆளுநரின் செயல்பாடுகளை எப்படி?

“ஆளுநர் உரையில் வாசிக்கவேண்டிய பகுதிகளை முந்தைய ஆளுநர் வாசிக்காமல் விட்டது குற்றம். இந்த ஆளுநர் இன்று அந்தத் தவறை செய்யவில்லை. இன்றைக்கு அவருக்கு பாஸ் மார்க் காலத்தில் கேரளாவில் அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.
மத்திய அரசுக்கு எடுபிடி வேலை செய்யத்தானே ஆளுநர்கள் இருக்கிறார்கள்”

முதல்வர் விஜய்க்கும். த.வெ.க. அரசுக்கும் தொடர்ந்து பாராட்டு மழை பொழிகிறீர்கள். சட்டப்பேரவையில் உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இதை வழிமொழிவார்களா?

“நல்ல காரியங்கள் நடந்தால் பாராட்டிப் பேசுவார்கள்.விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் விமர்சிப்பார்கள்.” 

‘உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கப்பட்டோம்’ என்று நீங்களும், துரை வைகோவும் தொடர்ந்து கூறிவருகிறீர்களே… என்ன நடந்தது அப்போது?

‘திராவிட மாடல் அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் நான் பாராட்டிப் பேசிய அளவுக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரும் பேசியது கிடையாது. அப்படி இருந்தும் நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடக் கூடாது. திமுக சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டோம். மற்றவர்களுக்கு கொடுத்த இடங்களைவிட எங்களுக்கு மிகக் குறைந்த இடங்கள்தான் கொடுக்கப்பட்டன. கூட்டணியில் நாங்கள் நடத்தப்பட்ட விதம், கொடுக்கப்பட்ட இடங்கள் எங்கள் நிர்வாகிகளின் மனதை மிகவும்காயப்படுத்தியுள்ளது.”

இவ்வளவு நாளாக இதனை வெளிப்படுத்தாமல், இப்போது ஏன் சொல்கிறீர்கள்?

*கூட்டணியில் இருந்ததால் சகித்துக்கொண்டோம். ஜீரணித்துக்கொண்டோம். எதையும் வெளிப்படையாக விமர்சனம் செய்யாமல் அமைதி காத்தோம்.”
ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டிருந்தால், இந்நேரம் கூட்டணி அரசில் ம.தி.மு.க. பங்கேற்றிருக்கும் அல்லவா?
“நடந்து முடிந்த ஒன்றைப் பற்றி கற்பனையாக யூகமாக சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.”

தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாகத்தானே ம.தி.மு.க. உதயமானது. அந்த நோக்கத்தை த.வெ.க. நிறைவேற்றிவிட்டதாக கருதுகிறீர்களா?

“நான் திட்டமிட்டு ஒரு பெரிய பதவிக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. அப்போதைய சூழல் ம.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கவைத்தது. அதனால் இந்த ஒப்பீடு சரியாகாது”

32 ஆண்டுகால ம.தி.மு.க.வின் பயணத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா?

தமிழ்நாட்டின் வாழ்வாதாரங் களைப் பாதுகாப்பதற்கு நானும் எங்கள் இயக்கமும் செய்த தியாகங்களையும் போராட்டங்களையும் எந்தக் கட்சியும் செய்யவில்லை. முல்லைப் பெரியாறு, நீட் எதிர்ப்பு, ஸ்டெர்லைட் மூடல், காவிரி மண்டலப் பாதுகாப்பு, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பெரியார் மையம் போன்ற பல பிரச்னைகளில் போராடியிருக்கிறோம். ஆனால் ஊடகங்களில் இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. மாறாக நையாண்டி, ஏளனம், கிண்டல் செய்கிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.”



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here