back to top
26.9 C
London
Thursday, June 25, 2026
No menu items!
Homeஅரசியல்இனி கூட்டணியே இல்ல.. சிங்கம் சிங்கிளா தான் வரும்? உறுதிப்படுத்திய ஆ.ராசா..! - Kumudam

இனி கூட்டணியே இல்ல.. சிங்கம் சிங்கிளா தான் வரும்? உறுதிப்படுத்திய ஆ.ராசா..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக தனித்து போட்டியிடுவது குறித்த உடன்பிறப்புகளின் கருத்துகள் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும், அப்பாவை காணோம் என்று முதலமைச்சர் விஜய் கூறிய கருத்து ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் இருக்கும் வரை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாட்டி ஆள்கின்றான் என்பது பொருள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்தார். 

இந்த நிலையில், திமுகவின் தேர்தல் நிலைப்பாட்டை உறுதி செய்யும் விதமாக ஆ.ராசா பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்று வருகிறது. 

இவ்விழாவில் உரையாற்றிய ஆ.ராசா, “மு.க.ஸ்டாலின் போன்ற தலைவரை ஒரு தேர்தலின் வெற்றி அல்லது தோல்வியை வைத்து மதிப்பிட முடியாது. அவரது அரசியல் பயணமும், மக்கள் நலப் பணிகளும் அதைவிட பெரியவை” என்று கூறினார்.

தொடர்ந்து கூட்டணி அரசியல் குறித்து பேசிய அவர், “ஒரு கூட்டணிக் கட்சித் தலைவர் ‘திமுக கூட்டணியே இல்லை’ என்று கூறுகிறார். அவர் விரும்பினால் திமுக கூட்டணியில் தொடர விருப்பமில்லை என்று சொல்லலாம். ஆனால் திமுக கூட்டணி இல்லை என்று அறிவிக்கும் உரிமை அவருக்கு யார் கொடுத்தது?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “திமுக தலைமையிலான கூட்டணியில் 60-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஒருவர் பொதுக்குழுவைக் கூட்டி கூட்டணியின் எதிர்காலம் குறித்து முடிவு அறிவிப்பதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கூட்டணியில் இருக்க விருப்பமில்லை என்றால் அதை வெளிப்படையாக அறிவிக்கலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

அதோடு, “திமுக இனி யாருடனும் கூட்டணி அமைக்காது என்று அறிவித்து, 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் அரசியல் நிலைத்தன்மையையும் கருத்தில் கொண்டால் அதுவே சரியான முடிவாக இருக்கும்” என்று தனது தனிப்பட்ட கருத்தையும் ஆ.ராசா பதிவு செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையைப் பாராட்டிய அவர், “பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் அரசியல் சிந்தனைகள் மற்றும் கொள்கைகளின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பை மு.க.ஸ்டாலினிடம் காண முடிகிறது” என்று புகழாரம் சூட்டினார்.

திமுக கூட்டணிக்குள் சமீபகாலமாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் மற்றும் கூட்டணி தொடர்வது தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் சூழலில், ஆ.ராசாவின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக கூட்டணி அரசியல் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது கருத்துகள் கூட்டணிக் கட்சிகளுக்கு மறைமுக பதிலடியாக பார்க்கப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here