இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர் லீடர் ஒருவர், “மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்த காலத்தில், 2021ல் நடந்த உள்ளாட்சித் தேர்தல், 2024ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க, 21 சதவிகித வாக்குகள் வரை தொட்டது. 2026 சட்டசபைத் தேர்தலை பா.ஜ.க தலைமையிலேயே சந்திக்க அண்ணாமலை முயன்ற நிலையில், அவரை தலைவர் பதவியில் இருந்து மாற்றி நயினார் நாகேந்திரனை நியமித்தது டெல்லி, இங்கிருந்துதான் கட்சியின் செல்வாக்கு சரிய துவங்கியது. அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க., அதலபாதாளத்துக்குச் சென்றது.
அதாவது 40 தொகுதிகள் கேட்ட பா.ஜ.கவுக்கு 27 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக அதிலும் பா.ஜ.க. தரப்பிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் 7க்கு மேல் தர மறுத்துவிட்டது. இப்படியான அதிமுகவின் உதாசீனப்போக்கால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெயரளவுக்கு மட்டுமே தேர்தல் பணியாற்றினர். கூட்டணி கெமிஸ்டரி சுத்தமாக வொர்க் அவுட் ஆகவில்லை. 27 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றியடைந்தது. இது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கு பிறகும்கூட தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்யவோ, தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ தலைமை முன்வரவில்லை.
இதற்கிடையே பாஜகவில் இருந்து விலகி, தனி இயக்கத்தை தொடங்கினார் அண்ணாமலை. அந்த இயக்கத்தில் 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உறுப்பினர்களாகி இருக்கிறார்கள். இதுதான் பா.ஜ.க.வை பல கோணங்களில் யோசிக்க வைத்திருக்கிறது. ஏனெனில் அதில் இணைந்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.கவினர்தான்.
மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த பா.ஜ.க. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 5வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவை 13 இடங்களில் 3வது இடத்திற்கு தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்த பாஜகவின் வாக்கு வங்கி இப்போது வெறும் 299 சதவிகிதம் அண்ணாமலை தான். தமிழக அமைச்சரவையில் 60 வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸ் இடம்பிடித்துவிட்டது. இனி காங்கிரஸ் ஓரளவுக்கு வளர்ச்சியை நோக்கிச் செல்லும். பா.ஜ.க.வுக்கு அப்படியொரு வாய்ப்பு இல்லை. தேர்தல் தோல்வி, தவெ.கவின் சுனாமி வளர்ச்சி, அண்ணாமலையால் கரையும் பாஜக என இவற்றை எல்லாம் சரிசெய்ய தலைமையை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை.
புதிய தலைவர்கள் லிஸ்ட்டில் பேராசிரியர் ராம சீனிவாசன், நாராயணன் திருப்பதி. மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன். அஸ்வத்தாமன், கே.பி.ராமலிங்கம் ஆகியோரை சாய்ஸில் வைத்திருக்கிறது தலைமை. அதேபோல் மாநில அமைப்புச் செயலாளராக கே.டிராகவனை நியமிக்கவும் பரிசீலிக்கிறது. இவர்களில் ராம சீனிவாசன் 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டசபைத் தேர்தல் என போட்டியிட்டவர். அமித் ஷா, நட்டா ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.
நாராயணன் திருப்பதியின் சோஷியல் மீடியா பதிவுகள் பா.ஜ.க. தொண்டர்களுக்கு பூஸ்ட் கட்சியில் நெருங்கிய தொடர்பும், நல்ல பெயரையும் வைத்திருக்கிறார். இதுவே அவரை மேல்மட்டத்தில் இருப்பவர்களிடம் தலைவர் பதவிக்கான தேர்வுவரை கொண்டு சென்றிருக்கிறது. ஸ்டாலின் பவர்ஃபுல் மேயராக இருந்தபோது டஃப் கொடுத்தவர் கராத்தே தியாகராஜன் அதேபோல் அதிமுகவில் இருந்துகொண்டே ஜெயலலிதாவை எதிர்த்தவர் என்ற இமேஜூம் இவருக்கு பெரிய ப்ளஸ். காங்கிரஸ் பாலிடிக்ஸிலும் ஊறிப்போனவர் என்பதால் டெல்லி லாபி இவருக்கு அத்துப்படி இதனால் இவரையும் சாய்ஸில் வைத்திருக்கிறது டெல்லி தலைமை.
அஸ்வத்தாமன் வட மாவட்டங்களில் பலம் வாய்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர். இதுவரை இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு தலைமை பதவி வழங்கப்படாததால், இவரும் ஆப்ஷனில் இருக்கிறார். கேபிராமலிங்கம். அதிமுக மற்றும் தி.மு.க என இரு கட்சிகளிலும் பவர்ஃபுல்லாக டிராவல் செய்தவர் என்பதும், கொங்கு மண்டலத்தின் முக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவரது ப்ளஸ். மத்திய அமைச்சர் ப்யூஷ் கோயல் உள்ளிட்ட அனைத்து மேலிடத் தலைவர்களுடனும் இவருக்கு நல்ல அறிமுகம். இவர்களில் யாரையாவது ஒருவரை தலைவராக நியமிக்கும்பட்சத்தில், மற்ற நிர்வாகிகளும் முழுவதுமாக மாற்றியமைக்கப்படுவார்கள் என்றும், இவர்கள் வழியாக கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்படும் எனவும் நினைக்கிறது பா.ஜ.க தலைமை” என முடித்தார்.
ஒவ்வொரு மாதிரியான தரவுகள் கட்ட தேர்தல் ஆணையம் தங்களின் நட் பெற்ற வாக்கு சதவிகிதத்தை இதுகுறித்து ராமசீனிவாசனிடம் கேட்டபோது, “பதவிகளை எதிர்பார்த்து நான் செயல்படுவது இல்லை. பாஜகவுக்காக எப்போதும் உழைப்பேன். அகில இந்திய தலைமை என்ன பொறுப்பு வழங்குகிறதோ அதற்கேற்றபடி சிறப்பாக செயல்படுவேன்” என்றார். நாராயணன் திருப்பதி நம்மிடம், “ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் என்ற அடிப்படையில் தரவுகளுக்காக ஒவ்வொரு கட்சியும் பதிவு செய்கிறது. பா.ஜ.க. அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டிருந்தால் சதவிகிதம் மாறுவதற்கு வாய்ப்புண்டு. ஆகவே கூட்டணி அமைத்து போட்டியிடும்போது, கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளின் சராசரியைத்தான் பார்க்க வேண்டுமேயன்றி 234 தொகுதிகளையும் வகுத்து ஒரு சராசரியை சுட்டிக்காட்டுவது அறியாமையே என்றார்.
தலைவர் பஞ்சாயத்தை சீக்கிரம் முடித்தால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.







