back to top
31.7 C
London
Tuesday, June 23, 2026
No menu items!
Homeதமிழ்நாடுதொடர் விடுமுறை சென்னையில் இருந்து 1,432 சிறப்பு பேருந்து இயக்கம் - Kumudam

தொடர் விடுமுறை சென்னையில் இருந்து 1,432 சிறப்பு பேருந்து இயக்கம் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஜூன் 26 (வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகை), ஜூன் 27 (சனிக்கிழமை), ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) எனத் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது.  இதனை முன்னிட்டு ஜூன் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகச் சென்னையின் பல்வேறு பேருந்து முனையங்களில் இருந்து குறிப்பிட்ட வழித்தடங்களின் அடிப்படையில் பேருந்துகள் பிரித்து இயக்க முடிவு செய்யப்பட உள்ளது. 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு ஜூன் 25-ஆம் தேதி (வியாழக்கிழமை) 525 பேருந்துகளும், அடுத்த இரு நாட்களுக்குத் தலா 315 பேருந்துகளும் இயக்கப்படும்.

கோயம்பேடு முனையத்திலிருந்து திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு வியாழக்கிழமை 85 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 75 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், மாதவரம் முனையத்திலிருந்து வடக்கு மாவட்டங்களுக்குத் தினமும் தலா 14 பேருந்துகளும், பெங்களூரு, கோவை, ஈரோடு போன்ற பிற முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.

தொடர் விடுமுறை முடிந்து ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மக்கள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற வேலை நிமித்தமான பெருநகரங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு ஊர்களில் இருந்து 615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தொலைதூரப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணிகள், கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in அல்லது டிஎன்எஸ்டிசி (TNSTC) மொபைல் செயலி மூலமாகத் தங்களின் பயண இடங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புப் பேருந்து இயக்கங்களை எவ்விதத் தடையுமின்றிச் சீராகக் கண்காணிக்க, அனைத்து முக்கியப் பேருந்து நிலையங்களிலும் போதிய எண்ணிக்கையிலான சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக போக்​கு​வரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here