back to top
26.4 C
London
Tuesday, June 23, 2026
No menu items!
Homeசினிமா”துணை முதலமைச்சருக்கு வாழ்த்துகள்… நான் அரசியலுக்கு வருகிறேனா?” – விஜய் ஆண்டனி ! - Kumudam

”துணை முதலமைச்சருக்கு வாழ்த்துகள்… நான் அரசியலுக்கு வருகிறேனா?” – விஜய் ஆண்டனி ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக நீண்ட நாட்களாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் தான், பேரறிஞர் அண்ணாவால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்தபக்கம் பவளவிழா நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபக்கம் அதேநேரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் என்ற அறிவிப்பும் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இதனையடுத்து நேற்று (செப். 29) துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். இவருக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வகையில் நடிகர் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 
இந்நிலையில் மதுரை சின்ன சொக்குளம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மாலில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஹிட்லர் பட குழுவினர் ரசிகர்களுடன் திரைப்படத்தை கண்டு ரசித்தனர். 

இதனைத் தொடர்ந்து, ரசிகர்களுடன் விஜய் ஆண்டனி மற்றும் பட குழுவினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் ஆண்டனி, ஹிட்லர் திரைப்படம் குறித்து பேசினார். அதோடு, ”உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள். அரசியல் பாரம்பரியம் https://www.ufaalr.com/ மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர் அனைவரிடமும் இயல்பாக பழகும் குணம் கொண்டவர். திரைப்படத்துறையில் இருந்து கலைஞர், எம்ஜிஆர் உள்ளிட்டோர் அரசியலில் பங்காற்றியுள்ளனர். அந்த வகையில் விஜய்யும் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை” நடிகர் விஜய் ஆண்டனி என்று கூறினார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here