இதுகுறித்து டெண்டர் நடைமுறைகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் அரசு துறை ஒப்பந்ததாரர்களிடம் பேசினோம்.
“அரசு பணிகளை மேற்கொள்ள பதிவு செய்த ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். ரூ.75 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட பணிகளைச் செய்வோர் முதல்தர ஒப்பந்ததாரராக அங்கீகரிக்கப்படுவர். அதற்கு குறைவான பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள், அவர்களது பணி மதிப்பீட்டிற்கு ஏற்ப மொத்தம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுவர்.
கடந்த காலங்களில் பெட்டி வைத்து டெண்டர் படிவங்கள் பெறப்பட்டு, டெண்டர்களை பரிசீலித்து, யார் குறைவான தொகைக்கு ஏலம் கேட்டுள்ளார்களோ அவர்களுக்கு பணி வழங்கப்படும். இந்த நடைமுறையில் அமைச்சர், மாவட்டச் செயலாளரில் தொடங்கி உள்ளூர் கவுன்சிலர் வரையிலும், தலைமை அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை ஒவ்வொருவரையும் கவனித்தால் மட்டுமே டெண்டர் எடுக்கவும், வேலையை முடித்து பணம் பெறவும் முடியும்.
இ-டெண்டர்… புதிய வகை ஊழல்!
இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, அரசு துறைகளில் கடந்த 25 ஆண்டுகளாக படிப்படியாக இ-டெண்டர் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. இதனால், முறைகேடுகள் ஒழிவதற்கு பதிலாக வேறு வடிவம் பெற்றதுதான் வேதனை. கடந்த காலங்களில் டெண்டர் எடுக்க விரும்பும் ஒப்பந்ததாரருக்கு படிவம் கொடுக்கும் நிலையிலேயே ‘செக்’ வைக்கப்பட்டு,ஆனிய தரமா வேசை நடக்கு அவர்கள் விரும்பு பவர்களுக்கு மட்டும் படிவம் வழங்கப்பட்டு, பணி ஒதுக்கீடு செய்யப்படும். இணையவழியில் டெண்டர் எடுக்க விரும்பும் ஒப்பந்ததாரர், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், சைட் விசிட் சர்டிபிஃகேட், மிஷினரி சர்டிபிஃகேட் ஆகியவற்றை பெற்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே டெண்டர் படிவம் ஏற்கப்படும் என்ற விதிமுறை புகுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இ-டெண்டரின் அடிப்படையே தகர்க்கப்படுகிறது. டெண்டர் பெற நினைப்பவர், சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்தித்து சான்றிதழ் கேட்டால், துறை அமைச்சர் அல்லது அவரது பிரதிநி தியிடம் பேசுமாறு தகவல் தெரிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அமைச்சரின் பிரதிநிதியைச் சந்தித்து மொத்த மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் தொகையைக் கொடுத்தால் மட்டுமே, டெண்டருக்கு விண்ணப்பிப்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு, ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்யப்படும். சில பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களிடையே போட்டி கடுமையாக இருந்தால், அதிகபட்சமாக 35 சதவிகிதம் வரை கட்டிங் கொடுத்த சம்பவங்களும் உண்டு.
10 பர்சன்ட் பார்ட்டி ஃபண்ட்!
ஒப்பந்ததாரர்களிடம் பெறப்படும் கட்டிங்கில் 10 சதவிகிதம் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் கட்சி தலைமைக்கு அல்லது ஆட்சி தலைமைக்கு செல்வது கடந்த 25 ஆண்டுகளாக வழக்கமாக இருந்தது. எந்த டெண்டர் என்றாலும், அமைச்சர் அலுவலகத்தில் அனுமதி பெறும்போதே, யாருக்கு, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். அதை அவர்கள் பின்பற்றினால் மட்டுமே அதே பணியிடத்தில் தொடர முடியும்” என சொல்லி முடித்தனர்.
தொடர்ந்து கட்டுமானத்துறையினரிடம் பேசினோம், “வீடு, மனை, ரியல் எஸ்டேட் துறையில் சென்னை தவிர இதரப் பகுதிகளில் சதுர அடிக்கு ரூ. 30 வீதமும், நில வகைப்பாடு மாற்றத்திற்கு ஏக்கருக்கு ரூ. 3 லட்சமும், சென்னை சி.எம்.டி.ஏவில் சதுர அடிக்கு ரூ.35 முதல் 50 வரையிலும், நில வகைப்பாடு மாற்றத்திற்கு ஏக்கருக்கு 5 லட்சம் வரையிலும் கப்பம் கட்ட வேண்டி இருந்தது. கட்டிட அனுமதி பெற1601 லகள் LDIT… ஆன்லைனில் அனைத்து ஆவணங்களையும் முறையாக இணைத்து இல்லை என்றால், ஏதாவது குறை விண்ணப்பித்தாலும், ‘கட்டிங்’ சொல்லி விண்ணப்பம் நிராகரிக்கப்படும்” என்றனர்.
டெண்டர் விதிகள்: மாற்றம் தேவை டெண்டர் ஒதுக்கீட்டில் புதிய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாகவும், தேவைப்படும் மாற்றங்கள் குறித்தும் அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராமனிடம் பேசினோம்.
“ஒப்பந்ததாரர்கள் எந்த பணிக்கும் கமிஷன் வழங்க வேண்டியதில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக அறிவித்தது வரவேற்கத்தக்கது. இதன்படி, புதிய அரசு பொறுப்பேற்றதும் சில மாற்றங்கள் நடந்திருக்கின்றன. சென்னை மாநகராட்சியில் லிமிடெட் டெண்டர் என்று சொல்லக்கூடிய ஒரு சிலர் மட்டுமே போட்டியிட வாய்ப்புள்ள டெண்டர்களை ரத்து செய்துள்ளார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் சான்றிதழ் சமர்பிக்கும் முறையை ரத்து செய்து ஓபன் டெண்டர் கொண்டுவந்துள்ளனர். முறையைக் அதேசமயம், டெண்டர் சட்ட விதிகளில் சில திருத்தங்களைக் கொண்டுவந்து, புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்படி, பதிவுபெற்ற ஒப்பந்ததாரர்கள் அவர்களின் பணி திறனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பதிவு செய்தாலே ஒப்பந்தங்கள் வழங்கப்பட வேண்டும்.
முதலில் ‘டெக்னிகல் ஃபிட்’டில் பங்கேற்று தேர்வு பெறுவோருக்கு மட்டுமே விலைப்பட்டியல் வழங்கப்படுகிறது. இதில் ஒருவரை மட்டும் தகுதி பெற்றவராக தேர்ந்தெடுத்து அவருக்கு மட்டும் பணி ஒதுக்கீடு செய்யப்படும் முறைகேடு நடக்கிறது. இதை மாற்ற விலைப்பட்டியல் ஸ்டேஜில், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தகுதி பெற்றால் மட்டுமே டெண்டர் செல்லுபடியாகும். அவ்வாறு தேர்வாகாவிட்டால், மறு டெண்டர் கோரும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ரூ.50 லட்சத்திற்கும் கீழ் மதிப்பீடு இருந்தால், இ-டெண்டர், ஓபன் டெண்டர் தேவையில்லை என்ற விதிமுறை இருக்கிறது. இந்த விதிமுறையில் இருந்து தப்பிக்க, பணியின் மதிப்பீட்டை ரூ. 49 லட்சம் என பிரித்து தனித்தனி டெண்டராக போட்டு விதிமீறல் நடக்கிறது. இதைத் தடுக்க ரூ. 1 லட்சத்துக்கு மேல் உள்ள அனைத்துப் பணிகளுக்கான ஒப்பந்தத்தையும் ஓபன் டெண்டராகவே மாற்ற வேண்டும். இதன்மூலம் அதிக எண்ணிக்கையிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பார்கள். குறைந்த செலவில் அரசின் திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியும். ஒப்பந்ததாரர்கள் சிண்டிகேட் போட்டு தவறு செய்வதைத் தடுக்க முடியும்” என்றார்.
அரசு துறைகளை முழுமையாக சீர்படுத்துவது காலத்தின் தேவை.







