back to top
17.3 C
London
Monday, June 22, 2026
No menu items!
Homeசினிமா3 நாட்களில் 300 கோடி… பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் ‘தேவரா’..! - Kumudam

3 நாட்களில் 300 கோடி… பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் ‘தேவரா’..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடித்துள்ள தேவரா திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் கடந்த 27 ஆம் தேதி வெளியானது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகம் தான் தற்போது வெளியாகியுள்ளது. அப்பா –மகன் என டூயல் ரோலில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள நிலையில், ஜான்வி கபூர், சயிப் அலிகான், கலையரசன், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

படத்தின் கதையை பொறுத்தவரை, மீன் பிடித்தொழில் செய்யும் 4 கிராமத்தினர் ஜூனியர் என்டிஆரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றனர். கடல் வழியாக செல்லும் கப்பல்களில் உள்ள கண்டெய்னர்களை, டான் ஒருவனுக்காக கடத்துவது தான் இந்த கிராமத்தினரின் வேலை. ஆனால், அதில் தீவிரவாதிகளுக்காக ஆயுதங்கள் கடத்தப்படுகிறது எனத் தெரிந்ததும், ஜூனியர் என்டிஆர் அதற்கு எதிராக நிற்கிறார். இதனால் 3 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து ஜூனியர் என்டிஆரை போட்டுத் தள்ளுகின்றனர். அதன்பின்னர் மகன் ஜூனியர் என்டிஆர் என்ட்ரியாக, மீதி திரைக்கதை என்னவாகிறது என்பது தான் தேவரா திரைப்படம்.      

தேவரா வெளியான முதல் நாளே 172 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை ஆட்டிப்படைத்தது. இரண்டாம் வசூலோ 71 கோடி ரூபாய் வசூலித்து. 

இந்த நிலையில், முதல் இரண்டு நாட்களில் 243 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘தேவரா’, மூன்று நாட்களில் 300 கோடியை கடந்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில், ‘தேவரா’ திரைப்படம் உலகளவில் 304 கோடியை மூன்றே நாட்களில் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here