back to top
25.8 C
London
Sunday, June 21, 2026
No menu items!
Homeஅரசியல்"வாயத் திறங்க CM!" – தி ரியல் OG திமுக is Back..! - Kumudam

“வாயத் திறங்க CM!” – தி ரியல் OG திமுக is Back..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் என்பதால், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் இந்த கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய அரசின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் ஆட்சியின் திசையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இந்த கூட்டத்தொடர் பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், சட்டம் ஒழுங்கு விவகாரத்தை முன்வைத்து திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டும் திமுக, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களது சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். மேலும், அந்த பேட்ஜில் “வாயத் திறங்க CM!” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலேயே இந்த வாசகம் இடம்பெற்றுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் இந்த நடவடிக்கை சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சியினர் இவ்வாறு எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பது, இன்றைய பேரவை நிகழ்வுகள் அனல் பறக்கும் விவாதங்களுக்கு வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கேள்வி நேரம் மற்றும் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்விகளை எழுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், அரசின் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் அளிக்கப்படுகிறது என்பதையும் அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

புதிய அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரே அரசியல் மோதல்களுடன் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான விவாதங்கள் வரும் நாட்களில் மேலும் தீவிரமடையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here