back to top
15.1 C
London
Monday, September 28, 2026
No menu items!
Homeஅரசியல்வரி வருவாய் வீழ்ச்சி, ரூ.13 லட்சம் கோடி கடன், வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் அமைச்சர் மரியவில்சன்...

வரி வருவாய் வீழ்ச்சி, ரூ.13 லட்சம் கோடி கடன், வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் அமைச்சர் மரியவில்சன் குற்றச்சாட்டு – Kumudam

Date:

Related stories

Meesaya Murukku 2 Review – மீண்டும் ஹிப் ஹாப் ஆதி…குடும்பத்தோடு ரசிக்கலாமா?

மூன்று தலைமுறைகளின் கனவு, கானா பாடலுக்கான அங்கீகாரம், சமூகத் தடைகள்...

சாதிய தடைகளைத் தாண்டி செஸ் களத்தில் சிறுவன்… ‘கிராண்ட் மாஸ்டர்’ எப்படி? – Kumudam

துப்புரவு பணியாளரான அபர்ணதி தன் மகனை அரசு பள்ளியில் படிக்க வைத்து,...

சிகப்பு ரோஜாக்கள்..50 ஆண்டுகள் கடந்தும் குறையாத திகில்..கமலின் ‘திலீப்’ ஏன் இன்றும் மிரட்டுகிறது?

கமல்ஹாசன்–ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘சிகப்பு ரோஜாக்கள்’ உருவான...

படம் மறந்தாலும்… பாட்டு மறக்குமா? ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ சொல்லும் 70s இசை நினைவுகள்! – Kumudam

படம் அவுட்டு... பாட்டு ஹிட்டு! - வி.ராம்ஜி மெல்லிசை மன்னரின் காலம்...
spot_imgspot_img


வெள்ளை அறிக்கை வெளியிட்டு அவர் பேசியதாவது: வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளது. வரவை விட செலவை கட்டுப்படுத்துவதே முக்கியம் என திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வரவைக் காட்டிலும் செலவே அதிகமாக உள்ளது. 2021 – 2026 வரையிலான காலகட்டத்தில் மாநில சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

தமிழக அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது. ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 28.3% கடன் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கடன் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழக வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம் அடைந்துள்ளது.வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. ரூ.10 லட்சம் கோடி நேரடி கடன், ரூ.78 ஆயிரத்து 324 கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது. வரலாறு காணாத உச்சம் ஆகும்.அரசின் வருவாய் ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 பைசா வட்டிக்கே செலவாகிறது.பொதுத்துறை நிறுவன கடனையும் சேர்த்தால் மாநிலத்தின் உண்மையான கடன் ரூ.13.18 லட்சம் கோடி.

தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபரின் மீதும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 934 ரூபாய் கடன் உள்ளது.முந்தைய அரசு முதலீட்டுக்கு அல்லாமல் அன்றாட செலவுக்கு கடன் வாங்கி உள்ளது.தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.67 ஆயிரம் கோடி வட்டி மட்டும் செலுத்துகிறது.கனிம வளத்துறையில் வருவாய் இழப்பு பெருமளவில் ஏற்பட்டுள்ளது.கனிம வளத்துறையில் நடந்த ஊழல் வருவாய் இழப்புக்கு முக்கிய காரணம்.பரந்த இயற்கை வளங்கள் இருந்தும் வருவாயை பெருக்கவில்லை.

அண்டை மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தின் ஜிஎஸ்டியும் குறைவாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதி பகிர்வு சரியாக கிடைக்கவில்லை. மாநில ஜிடிபியில் மொத்த வருவாய் அளவு 10ல் இருந்து 8.32 சதவீதம் ஆக சரிவு. கடந்த ஆட்சியில் தனிநபர் கடன் 92 சதவீதம் உயர்ந்துள்ளது. பத்திரப்பதிவில் வழிகாட்டு மதிப்பு குறைக்கப்பட்டதால் வருவாய் இழப்பு ஏற்பட்டது.  என தொடர்ந்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here