back to top
14.7 C
London
Saturday, September 26, 2026
No menu items!
Homeஅரசியல்அதிமுக எம்எல்ஏக்களை தவெக ஷாப்பிங் செய்கிறது: விஜய் மீது ஸ்டாலின் சாடல் - Kumudam

அதிமுக எம்எல்ஏக்களை தவெக ஷாப்பிங் செய்கிறது: விஜய் மீது ஸ்டாலின் சாடல் – Kumudam

Date:

Related stories

படம் ஆரம்பிக்கிறதுக்குள்ளயே பிரச்னை… தனுஷ் ‘D56’ பூஜையில் என்ன நடந்தது? 

தனுஷின் ‘D56’ படத்தின் பூஜை மாரநாடு கருப்பண்ணசாமி கோயிலில் நடைபெற்ற...

ONE SUN.. ONE MOON.. ‘ஜெயிலர் 2’ படத்தின் SECOND SINGLE வெளியானது!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர் 2' படத்தின் 'ஒன்...
spot_imgspot_img


சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மகளிர் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-  அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள். தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் பெருகிவிட்டன. தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருந்துகின்றனர். திமுக பெற்ற வாக்குகளுக்கு மகளிரணியும் முக்கிய காரணம். திமுக ஆளுங்கட்சியாக மாற வேண்டும் என்றால் இன்னும் சுறுசுறுப்பாக வேகமாக செயல்பட வேண்டும். ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கே பாலியல் கொடுமை நடந்துள்ளது.

விஜய் ஆட்சி மீது விஜய்க்கே நம்பிக்கை இல்லையா? அதிமுக எம்எல்ஏக்களை ஷாப்பிங் செய்கிறார் முதலமைச்சர் விஜய். தவெகவினரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கும் நிலை வந்துவிட்டது. பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெகவினர் தான் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன. பாஜக மற்ற மாநிலங்களில் செய்வதை இங்கு விஜய் செய்கிறார். ஒரே மாதத்தில் கேலிக்கூத்தான, அசிங்கமான ஆட்சியாக தவெக ஆட்சி மாறியுள்ளது. கான்பிடன்டாக இருங்க என்ற விஜயே நம்பிக்கையுடன் இல்லை. தீர்ந்துபோன சக்தி என்று சொன்ன கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களையே திருடுகிறார் விஜய்.

திமுக ஆட்சியில் மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை செய்துக் கொடுத்தோம். தவெக ஆட்சியில் நாள்தோறும் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. பாலியல் வன்முறை, அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு நடக்கும்போது விமர்சிக்காமல் இருக்க முடியுமா?. நான் நிதிஆயோக் கூட்டத்துக்கு சென்றபோது ED வழக்கில் தப்பிக்க சென்றேன் என்றார் விஜய். பாஜகவை உறுதியாக விமர்சித்தால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என அமைதியாக இருக்கிறீர்களா?. நிதி ஆயோக் கூட்டத்தில் திமுகவின் சாதனைகள், திமுக முன்வைத்த கோரிக்கைகளை பேசியுள்ளார் விஜய். என ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here