back to top
16.1 C
London
Monday, June 15, 2026
No menu items!
Homeஅரசியல்ராஜினாமா செய்த அதிமுக  எம்எல்ஏக்களுக்கு 4 பேருக்கு  சிக்கல்: 1 வாரத்தில் பதிலளிக்க சபாநாயகர் உத்தரவு  ...

ராஜினாமா செய்த அதிமுக  எம்எல்ஏக்களுக்கு 4 பேருக்கு  சிக்கல்: 1 வாரத்தில் பதிலளிக்க சபாநாயகர் உத்தரவு   – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழக சட்டசபைத்  தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க பெருபான்மை கிடைக்கவில்லை. காங்., கம்யூ.,க்கள், காங்கிரசு உதவியுடன் தவெக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் சட்டசபையில் தவெக பெருபான்மை நிருபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் ஆதரவு அளித்தனர்.

இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது, இந்த பிளவு பின்னர் சரிசெய்யப்பட்டு அதில் 21 எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு திரும்பினர். ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகிய 4 பேரும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.21 பேரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் அவா்களை மன்னித்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலா்ாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததையடுத்து அந்த 21 பேர் மீதும் எந்த தகுதி நீக்க நடவடிக்கையும் இல்லை என்று சபாநாயகர்  ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா். அதேநேரத்தில் ராஜிநாமா செய்த நால்வர் மீதும் நடவடிக்கை தொடரும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நால்வர் மீதான கட்சித் தாவல் தடைச் சட்ட புகார் இன்னமும் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுக்கு சபாநாயகர்  நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ‘எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது ஏன்? உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என ராஜினாமா செய்த நால்வருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் 7 நாட்களில் அவர்கள் விளக்கம் அளிக்கவும் சபாநாயகர் அறிவுறுத்தி உள்ளார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here