back to top
16.4 C
London
Tuesday, June 16, 2026
No menu items!
Homeஅரசியல்த.வெ.க அமைச்சர்களுக்கு கிடுக்கிப்பிடி....சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காத புஸ்ஸி ஆனந்த் - Kumudam

த.வெ.க அமைச்சர்களுக்கு கிடுக்கிப்பிடி….சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காத புஸ்ஸி ஆனந்த் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



இதுகுறித்து தலைமை செயலகத்தில்  நீண்ட அனுபவம் உடைய உயரதிகாரிகளிடம் பேசினோம்.முதல்வர் விஜய் தலைமையில் மூன்று கட்டமாக 34  பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து 15 நாட்கள் கடந்துவிட்ட பிறகுஅரசு சார்பில் மூன்று நிலைகளில் பணியாற உத்தரவுகளை வழங்கவிடாமல் புஸ்ஸி ஆனந்த் முட்டுக்கட்டை போடுகிறார்.

பொதுவாகவே புதிதாக பதவியேற்கும் அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்துறையைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.ஸ் அதிகாரிகள், துறையின் செயல்பாடுகள் திட்டங்கள் குறித்து விளக்கி கூறுவார்கள். துறை அதிகாரிக்கும் அமைச்சருக்கும் இடையேயான அன்றாட பணிகளை முறைப்படுத்த ஸ்பெஷல் பர்கனல் அசிஸ்டென்ட் (ஸ்பெஷல் பி.ஏ.). சீனியர் பர்சனல் அசிஸ்டென்ட் சீனியர் ஜூனியர் பர்சனல் அசிஸ்டென்ட் என மூன்று நிலைகளில் அரசு அதிகாங்கள் நியமிக்கப்படுவார்கள். இப்படி நியமிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தலைமைச் செயலகத்தில் பணியாற்றக்கூடிய அண்டர் செகரட்டரி செக்ஷன் ஆபிஸர் உதவி செக்க்ஷன் ஆபீஸர் அந்தஸ்தில் உள்ள அரசு பணியாளர்களாகவே இருப்பார்கள் அரசின் பொதுத்துறை மூலம் இந்த அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த பணி உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இப்படி அமைச்சர்களுக்குரிய மூன்று கடத்தும் ஐ.எம். பி.ஏக்கள் துறையை அதிகாரிக்கு அமைச்சருக்கும் இடையே  இருந்து துறையின் கோப்புகள், அன்றாட செயல்பாடுகள் தங்குதடையின்றி நடக்க செய்வார்கள் இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் ஒவ்வொரு அமைச்சரும் அவரவர் அறைகளில் அரசுப் பணியில் உள்ள அரசு அலுவலர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்வார்கள் இப்படிப்பட்ட பி,ஏக்கள்  நியமனம் அமைச்சராக பதவியேற்ற  ஓரிரு நாட்களிலேயே நடந்து முடிந்துவிடும் எந்தவொரு குழப்பமோ தாமதமோ  இருந்ததில்லை.

ஆனால் ஜெயலலிதா இருந்த வரையில் அவரது ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டிய பி.ஏக் களை அவர்களாகவே தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டதில்லை. முதல்வரின் கனிப்பட்ட செயலாளர்களுக்கு அந்த அங்கீகாரத்தை ஜெயலலிதா வழக்கியிருந்தார் அதன்படி பொதுக்குறை அலுவலகம் மூலமாக அமைச்சர்களிடம் பி.ஏ.வாக பணிபுரிய தகுதியுடைய அல்லது விருப்பம் தெரிவிக்கிற தலைமைச் செயலக அலுவலர்களை, துறை வாரியாகத் தேர்வு செய்தவர்களுக்கு மூன்று நிலைகளிலும் பி.ஏ.எக்களை நியமிப்பார்கள். இந்த முறையிலும் தாமதம் ஏற்பட்டது இல்லை.

ஆனால் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் புதிய அரசில் அமைச்சர்களுக்கு பி.ஏ.க்கள் நியமனம் செய்யும் விவகாரத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேல் முட்டுக்கட்டை போட்டு வருகிறார் ஊரக  வளர்ச்சித் துறை புஸ்ஸி ஆனந்த் என்பதுதான் தலைமை அதிகார்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர்களுக்கு பி.ஏ க்கனை நியமிக்கும் விவகாரத்தை புஸ்ஸி  ஆனந்திடம் ஒப்படைத்திருக்கிறார் விஜய். அப்போது பி.ஏக்கள் நியமனத்தில் திமுகவினராகவோ அரசு அலுவர்கள் இருக்கக் கூடாது அதைவிட முக்கிய சொந்த சாதியைச் சேர்ந்தவர்கள உறவினர்களாகவோ இருக்கக் கூடாது என் கராரால்லியிருக்கிறார் விஜய்
அதனை வேதவாக்காக எடுத்துக் கொண்ட புஸ்ஸி ஆனந்த் செல்வாக்குப்  பெற்ற அமைச்சர்களான அருண் கே.ஏ செங்கோட்டையன் உள்ளிட்ட சிலரிடம் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள பி.ஏக்கள்  மட்டும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வராமல் விட்டுவிட்டார் ஆனால் மற்றவர்களின் பிஏ.க்கள் யார் யார் அவர்களில் பின்னணி என்ன என துருவி துருவி  விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த விசாரணைக்கே இருபது நாட்கள் எடுத்துக்கொண்டிருக்கும் புஸ்ஸி ஆனந்த்  முடிந்து ஒரு மாதம் கடத்துவிட்ட பிறகும் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்குரிய பி.ஏ.க்கள் நியமனத்தில் காலதாமதம் செய்துவருகிறார். இதனால் துறைச் செயலரளர்களிடம் இருந்து வரும் கோப்புகள் ஆராய்ந்து அதில் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டி கையெழுத்திட முடியாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இதனால் துறைச் செயலாளர்களிடம் இருந்து வரும் கோப்புகளை ஆராய்ந்து அதில் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டி கையெழுத்திட  பிறகுதான் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க முடியும். அதன் பிறகு அந்த கோப்பு முதல்வரின் அனுமதி பெறுவதற்கு அனுப்பிவைக்கப்படும். கடந்த 15 நாட்களாக முதல்வர் விஜய்யின் அனுமதிக்காக பெரும்பாலான அமைச்சர்களிடம் இருந்து துறை வாரியாக கோப்புகள் அனுப்பப்படாமல் அமைச்சர் கள் அறையிலேயே முடங்கிக் கிடக்கின்றன.

புஸ்ஸி ஆனந்த் தன்னைத் தவிர அனைத்து அமைச்சர்கள் மீதும் சந்தேகப்படுகிறார். குறிப்பாக விஜய்கர்களாக இருந்து அமைச்சர்களாகியுள்ள அனைவருமே தனது கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டுவிடக் கூடாது என கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார். புதிய அமைச்சர்களுக்கு பி.ஏ.க்களை நியமிக்கும் பணி இதற்கு முந்தைய காலங்களில் இவ்வளவு காலதாமதம் ஆனதே கிடையாது இந்த விவகாரத்தில்  பிடிவாதாமாக செயல்படும் புஸ்ஸி ஆனந்த்திற்கு எடுத்துச் சொல்லப்போவது யார் என்றே தெரியவில்லை என்று விரிவாக கூறினார்கள்.

தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்கள் சங்கத்தில் முன்னாள் வெங்கடேசனிடம் பேசினோம் “முந்தைய திமுக அதிமுக ஆட்சி நியமனம் சாவதில் ஆனால் தற்போதைய ஆட்சியில் முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்களும் அரசு நடைமுறைகளுக்கு புதியவர்கள் எனவே பி.ஏக்கள் நியமனம் குறித்து செய்வதில் அமைச்சர்களுக்கே முன் அனுபவம் உண்டு.ஆனால் தற்போதைய ஆட்சியில் முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்களும் அரசு நடைமுறைகளுக்கு புதியவர்கள் எனவே பி,ஏ.நியமனம் குறித்து விஜிசென்ஸ்  விசாரணை அரசு அலுவலர்களின் பின்னணி குறித்து விசாரித்து நியமனம் செப்வரில் தாமதம் எற்படுவது இருந்தாலும்  இயல்பானது தான் இருந்தாலும் பி.ஏ.க்கள் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து விளக்கம் பெற அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.அவரது  பி.ஏவிடம் நாம் பேசினோம் ‘துறைரீதியான ஆய்வில் அமைச்சர் பிஸியாக இருக்கிறாம். அவரிடம் பேசிவிட்டு தகவல் தெரிவிக்கிறோம் என்று கூறியவர் இந்த இதழ் அச்சுக்குப் போகும் வரை தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை

மக்கள் பணிகள் ஒரு போதும் தடைபடக் கூடாது.

எழுதியவர்-தாரை இளமதி



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here