back to top
14.6 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeஅரசியல்கூட்டணி டமால்? உடையும் காங்கிரஸ், தனிக்கட்சி மூடில் செல்வபெருந்தகை: அதிரடிக்கு தயாராகும் அறிவாலயம்  - Kumudam

கூட்டணி டமால்? உடையும் காங்கிரஸ், தனிக்கட்சி மூடில் செல்வபெருந்தகை: அதிரடிக்கு தயாராகும் அறிவாலயம்  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழக அரசியல் களம் தற்போது கோடை காலத்திற்கு முன்பே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சத்தியமூர்த்தி பவனில் அடிக்கும் காற்று, தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சாதகமாக இல்லை என்றே தெரிகிறது.

ஏனென்றால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக 25 சீட்டுக்கு மேல் தர மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு சீட் வீதம் 39 தொகுதியாக பெற்றுவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. ஆனால் செல்வபெருந்தகை திமுக கொடுக்கும் சீட்டை வாங்கி கொள்ளலாம் என காங்கிரசு மேலிட தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு கேசி வேணுகோபால், செல்வபெருந்தகையுடன் போனில் பேசியிருக்கிறார். அப்போது,   “விஜய் தவெகவுடன் நாம கூட்டணி அமைச்சா எப்படி இருக்கும்?”னு கேசி வேணுகோபால் கேட்டதற்கு,  அதுக்கு, “தற்கொலை முயற்சி”ன்னு செல்வப்பெருந்தகை பதில் சொல்லி இருக்கிறார். 

இதனால் கோபப்பட்ட கேசி வேணுகோபால், “யாருக்கு தற்கொலை முயற்சின்னு சொல்றீங்க? திமுகவுக்கா?”ன்னு கேட்டு இருக்கிறார். அதற்கு செல்வ பெருந்தகை, “இல்லை… விஜய் கூட கூட்டணி வெச்சா நமக்குதான் அது தற்கொலை முடிவு.. அப்படி நீங்க கூட்டணி வைக்கிறதுன்னு முடிவு செஞ்சுட்டீங்கன்னா நான் மாநில தலைவர் பதவியை ராஜினாமா பண்றோன் என ஆவேசமாக சொல்லி இருக்கிறார். 

இதனால் டென்ஷனில் போனை கட் செய்த கேசி வேணுகோபால், கார்கேவை போனில் தொடர்பு கொண்டு செல்வபெருந்தகை ராஜினாமா செய்வதாக கூறியது தொடர்பாக பேசி இருக்கிறார். ராகுல்காந்திக்கும் இந்த தகவலை வேணுகோபால் பாஸ் செய்துவிட்டார். இதன் காரணமாகவே முன்னாள் எம்.பி. செல்லக்குமாரை அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். 

தமிழக காங்கிரஸின் தற்போதைய தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றது முதல், அவர் திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். திமுக அனுதாபி போல செல்வபெருந்தகை மாறிவிட்டதாக டெல்லிக்கு ஏற்கனவே புகார்கள் ஏராளமாக குவிந்து உள்ளன. 

இதனால்  செல்வப்பெருந்தகைக்கு மாற்றிவிட்டு, புதிய தலைவராக செல்லகுமாரை நியமிக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லி இன்று ராகுல், சோனியா நடத்திய ஆளோசனை கூட்டத்திற்கு கூட செல்வபெருந்தகை அழைக்கப்படவில்லை. ஒரு ராஜ்யசபா சீட் வழங்க திமுக முன்வந்துள்ளது. இன்று மாலைக்கு ராஜ்சபா வேட்பாளரை அறிவிக்க திமுக காங்கிரசுக்கு கெடுவிதித்து இருந்தது. 

ஆனால் கூடுதல் தொகுதி கொடுத்தால் மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தை வருவோம் என காங்கிரசு பிடிவாதமாக உள்ளது. இந்த நிலையில், ப.சிதம்பரத்தை சந்திக்க வரும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து இருந்தார். இந்த சந்திப்புக்கு முன் செல்வபெருந்தகை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிதம்பர வீட்டில் சென்று ஆலோசனை நடத்தினார். 

இதன் பின்னர் இருவரும் ஒரே காரில் சித்தரஞ்சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு சென்றனர். காங்கிரசு கூட்டணிக்கு வேண்டுமா வேண்டாமா என முடிவெடுக்க. முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் அவசர ஆலோசனை தொடங்கி இருக்கிறார். இந்த ஆலோசனையில் கனிமொழி உள்பட முக்கிய நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர். 

காங்கிரசு இல்லாவிட்டால், திமுக வேறு ஒரு திட்டம் வைத்துள்ளதாக தெரிகிறது. செல்வபெருந்தகை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், காங்கிரசை உடைத்து செல்வபெருந்தகை தலைமையில் புதிய கட்சி உருவாக்கி அவர்களை திமுக கூட்டணியில் இணைத்து கொள்ள ஸ்டாலின் மாற்று யோசனை வைத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here