back to top
29.4 C
London
Saturday, June 27, 2026
No menu items!
Homeஅரசியல்சிட்டிங் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேரு அதே தொகுதி தர முடியாது: கறார் காட்டும் அறிவாலயம் ...

சிட்டிங் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேரு அதே தொகுதி தர முடியாது: கறார் காட்டும் அறிவாலயம்  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு இந்த முறை கூடுதல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 28 தொகுதிகளில் தற்போது சிட்டிங் தொகுதிகள் 17ம் மீண்டும் கிடைத்து விடும என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் திமுகவின் பென் நிறுவனம் எடுத்த சர்வேயின்படி காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏக்கள் 12 பேர் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

அந்த சர்வேயில் வேளச்சேரி – அசன் மௌலானா, சிவகாசி – அசோகன், வைகுண்டம் – ஊர்வசி அமிர்தராஜ் தொகுதிகளில் கடும் அதிருப்தி தெரியவந்துள்ளது. இதனால் இந்த தொகுதிகளில் திமுக போட்டியிடுவது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதே போல தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படும் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிட உள்ளார். அவர் வீழ்த்த திமுகவே இந்த தொகுதியில் களமிறங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

திமுக. சோளிங்கர் எம்எல்ஏ-வான முனிரத்தினமும், விருத்தாசலம் எம்எல்ஏ-வான ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் முன்னாள் காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள். இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது என செல்வபெருந்தகை தரப்பு நினைக்கிறது.  பொன்னேரி துரை சந்திரசேகர், விளவங்கோடு தாரகை கத்பர்ட்டுக்கு மீது பெரியளவில் தொகுதியில் ஆதரவு இல்லை.

நீலகிரி தொகுதியை இரண்டு முறை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டதால், அத்தொகுதி திமுக போட்டியிட வேண்டும் என  தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இப்படி 12 சிட்டிங் தொகுதி மீது திமுக கூறியிருப்பதால் மீண்டும் காங்கிரஸ் கொதிநிலைக்கு மாறி இருப்பதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here