back to top
26.6 C
London
Monday, August 10, 2026
No menu items!
Homeஉலகம்ஐ.நாவில் காசா போர்நிறுத்த தீர்மானம்... அமெரிக்கா மீது பாய்ந்த இஸ்ரேல்.. - Kumudam

ஐ.நாவில் காசா போர்நிறுத்த தீர்மானம்… அமெரிக்கா மீது பாய்ந்த இஸ்ரேல்.. – Kumudam

Date:

Related stories

“என்னுடைய ஸ்டைல் இதுதான்… கேலி பண்றீங்களா?” – நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்

தமிழக பட்ஜெட் உரையை பிழைகளுடன் உச்சரித்ததாக மதிமுக எம்எல்ஏ கார்த்திகேயன்...

“தினந்தினம் டென்ஷன்ல இருக்கோம்..”: புஸ்ஸி ஆனந்த் –  எம்ஆர்கே இடையே கலகல…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில்,...

விசில் புரட்சி செய்த கவுன்சிலர்… ஆக்‌ஷன் காட்டிய மேயர்!

திமுகவிலிருந்து விலகி தவெகவுக்கு சென்ற கவுன்சிலர் அல்லா பிச்சை ...

“1000 ஏக்கர், 1000 மாடு!” – முன்னாள், இந்நாள் அமைச்சர்களை மாட்டிவிட்ட எம்.ஆர்.கே..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வரும்...
spot_imgspot_img


பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது, கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு போர் தொடுத்தது. தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில், காசாவில் 13,000 குழந்தைகள் உள்ளிட்ட 32,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் விளைவாக மனிதாபிமான உதவிகள் இன்றி பசி, பஞ்சத்தில், காசாவில் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காசாவுக்கு ஆதரவான ஐ.நாவின் பல்வேறு முயற்சிகளை, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா தடுத்து நிறுத்தியது. தொடர்ந்து ரமலான் பண்டிகையையொட்டி காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களால் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து 15 நாடுகள் கொண்ட கவுன்சிலில், 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அப்போது பேசிய அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், போர் நிறுத்தத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு ஹமாஸ் தான் காரணம் என குற்றம்சாட்டினார்.  மேலும் தீர்மானத்தின் அனைத்து பகுதிகளையும் ஏற்கவில்லை எனக்கூறி, வாக்களிப்பதில் இருந்து பின்வாங்குவதாகவும் தெரிவித்தார். வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமல், வாக்களிப்பை புறக்கணித்தைத் தொடர்ந்து, பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் காசா உடனடி போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம், தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாதது, முந்தைய நிலைபாட்டில் இருந்து தெளிவான பின்வாங்கல் என குற்றம்சாட்டியுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here