back to top
11.7 C
London
Monday, September 21, 2026
No menu items!
Homeஅரசியல்விஜய் வேட்புமனு ஆய்வுக்கோரிய மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி  - Kumudam

விஜய் வேட்புமனு ஆய்வுக்கோரிய மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி  – Kumudam

Date:

Related stories

விசில் vs இரட்டை இலை… தாராபுரம் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி!

தாராபுரம் இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், சத்தியபாமாவின்...

ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் அண்ணாமலையார் ! அகற்றச் சொல்லும் நீதிமன்றம் !

திருவண்ணாமலை அடிவார ஆக்கிரமிப்புகள், பக்தர்கள் நெரிசல், 1535 வீடுகள் விவகாரம்......
spot_imgspot_img



சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் 100 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி பெரம்பூர் தொகுதி வாக்காளர் தாக்கல் செய்த வழக்கு, ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேட்புமனுவில் பெருந்தொகையை மனைவி உள்ளிட்டோருக்கு கடனாக வழங்கியுள்ளதாக, விஜய் தனது வேட்புமனுவில் கூறியுள்ளது குறித்து ஆய்வு செய்யக் கோரி, மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 பெரம்பூர் தொகுதி வாக்காளர் வெங்கடேஷ் தாக்கல் செய்த மனுவில், விவாகரத்து கோரி த.வெ.க. தலைவர் விஜய்-ன் மனைவி சங்கீதா வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், வேச்புமனுவில் அவருக்கு 12 கோடியே 60 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேட்புமனுவில் சொத்து விவரங்களை தெரிவிப்பது வெறும் சடங்கு அல்ல. அதில் உண்மை விவரங்களை மறைப்பது தேர்தல் நடைமுறையை மோசடி செய்வதை போன்றது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தனியார் கல்வி அறக்கட்டளைக்கு 20 கோடி ரூபாய் பணம் வழங்கியுள்ளது குறித்து வேட்புமனுவில் முறையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி  ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here