back to top
12.9 C
London
Sunday, September 20, 2026
No menu items!
Homeதமிழ்நாடு1 முதல் 9-ம் வகுப்பு ஆண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு ?: பள்ளி கல்வித்துறை  ...

1 முதல் 9-ம் வகுப்பு ஆண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு ?: பள்ளி கல்வித்துறை   சொன்ன அப்டேட் – Kumudam

Date:

Related stories

விசில் vs இரட்டை இலை… தாராபுரம் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி!

தாராபுரம் இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், சத்தியபாமாவின்...

ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் அண்ணாமலையார் ! அகற்றச் சொல்லும் நீதிமன்றம் !

திருவண்ணாமலை அடிவார ஆக்கிரமிப்புகள், பக்தர்கள் நெரிசல், 1535 வீடுகள் விவகாரம்......

"புதிய தலைமைச் செயலகம் அவசியம்" – மாணிக்கம் தாகூர் விளக்கம் !

விஜய் தலைமையிலான கூட்டணி, பிரதமர் வேட்பாளர் சர்ச்சை, திமுக விமர்சனம்...
spot_imgspot_img



தமிழகத்தில்  பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஏப்.6-ஆம் தேதியும் முடிய உள்ளது. வழக்கமாக பொதுத்தேர்வுகள் முடிந்த உடன் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வுகள் தொடங்கும். இந்த வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் ஏப்.22 முதல் 24-ஆம் தேதிக்குள் இறுதித் தோ்வு நடத்தி முடிக்கப்படும்.

ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.தமிழகத்தில் சட்டமன்றத் தோ்தல் ஏப்ரல் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நடைபெற வாய்ப்பிருப்பதாகக் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தோ்தலுக்கான வாக்குச் சாவடிகள் பள்ளிகளிலேயே அமைப்பது வழக்கம். இதனால் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தோ்வுகளை முன்கூட்டியே முடித்து, பள்ளிகளை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் நேற்று கூறியதாவது: பொதுத் தோ்வுகள் நிறைவடைந்ததும் மற்ற வகுப்புகளுக்கான தோ்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் தோ்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை நாள்கள் அறிவிக்கப்படும்.

1 முதல் 9 வகுப்புகளுக்கான தோ்வுகள் பொதுத்தோ்வு இல்லை என்பதால் தோ்வு நடைபெறும் தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் முடிவு செய்வா். ஏப்ரல் இரண்டாம் வாரத்துக்குள் ஆண்டு ஆண்டுத் தோ்வுகள் நடத்தி முடிக்கப்படும் என கூறினார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here